Enable Javscript for better performance
தேர்தல் நிதி பத்திரத்தால் வெளிப்படைத்தன்மை பாதிப்பு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நிதி பத்திரத்தால் வெளிப்படைத்தன்மை பாதிப்பு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

    By DIN  |   Published on : 28th March 2019 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ec


    தேர்தல் நிதி பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதால், வெளிப்படைத்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    அரசியல் கட்சிகள், தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை பெறும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தியது.
    அதற்காக, நிதிச் சட்டம், வருமான வரிச் சட்டம், மக்கள் பிரதிநித்துவச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
    அதன்பிறகு,  தேர்தல் நிதி பத்திரம் மூலமாக, அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று வருகின்றன. அவற்றில், பெரும்பாலான பத்திரங்கள் ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்புடையவை. இந்த தொகையை சாமானியர்கள் அளித்திருக்க முடியாது. பெருநிறுவனங்கள் மட்டுமே அளிக்க முடியும்.
    இந்நிலையில், தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோஸியேஷன் ஃபார் டெமாக்ரேட்டிக் ரிஃபார்ம்ஸ் என்றஅமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 
    அதன்படி, தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் விஜய்குமார் பாண்டே, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை புதன்கிழமை தாக்கல் செய்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
    தேர்தல் நிதி பத்திர திட்டத்தின் கீழ், நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. இதனால், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை இருக்காது.
    மேலும், நன்கொடை அளிப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு உச்ச  வரம்பு விதிக்கப்படாமல் இருப்பதும் வெளிப்படைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதையடுத்து, தேர்தல் நிதி பத்திர திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளஅனைத்து மனுக்களையும் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai