Enable Javscript for better performance
பப்புவுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது: ராகுலை விளாசிய மம்தா- Dinamani

சுடச்சுட

    

    பப்புவுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது: ராகுலை விளாசிய மம்தா

    By DIN  |   Published on : 28th March 2019 12:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Mamata_Banerjee_on_Rahul

     

    அந்த சின்னப்பையன் (பப்பு) விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:

    பப்பு (சின்னப்பையன்) ஏதேதோ உளறுகிறார். அவர் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். அதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். முன்னதாக, மேற்கு வங்கத்தில் மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தின் போது அக்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பொய் பரப்புரைகள் செய்துகொண்டும், போலி வாக்குறுதிகளையும் வாரி வழங்கியும் வருகின்றனர்.

    ஆனால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, விவசாயிகளின் தேவைகள் எதுவம் பூர்த்தி செய்யப்படவில்லை. மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி எதுவும் செய்யவில்லை. மேலும் இம்மாநிலத்தின் நிலை குறித்து அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த மாநிலமே ஒரேயொருவருக்காகத் தான் நடத்தப்படுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai