Enable Javscript for better performance
பிரிவினைவாதிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும்: பாஜக பொது செயலாளர் ராம் மாதவ்- Dinamani

சுடச்சுட

    

    பிரிவினைவாதிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும்: பாஜக பொது செயலாளர் ராம் மாதவ்

    By DIN  |   Published on : 28th March 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RamMadhav


    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் புதன்கிழமை தெரிவித்தார். 
    தேசிய மாநாட்டுக் கட்சியும்(என்சி), மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியும்(பிடிபி) பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    இதுகுறித்து ஸ்ரீநகரில் ராம் மாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
    ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் மீதும், பிரிவினைவாதிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ளுமாறு பிராந்திய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 
    இப்பிராந்தியத்தில் மக்கள் அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என்ற நோக்கத்துடனே பிரிவினைவாத அமைப்புகளுக்குத் தடை  விதிக்கப்பட்டது. அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்த போதிலும், தொடர்ந்து அவர்கள் வன்முறையை ஊக்குவிப்பதுடன், அதை பரப்பியும் வருகின்றனர்.
    இவர்கள் தேச விரோத சக்தியாக இயங்குவதுடன், கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
    மோடி தலைமையிலான மத்திய அரசு,  காஷ்மீரின் வளர்ச்சியையும், ஜனநாயக உரிமையையும் நிலைக்கச் செய்து, மக்களின் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. 
    எனவே, இப்பகுதி மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை யாதெனில், வரும் மக்களவைத் தேர்தலின்போது மக்கள் தாங்களாக முன்வந்து அதிகளவில் வாக்களித்து, தேசியவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை உலகிற்கு வேறுபடுத்தி காட்ட வேண்டும். 
    காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு சில கட்சிகள் மட்டுமே அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மாநிலமும் அமைதியான சூழ்நிலைக்கு திரும்பி விடும். 
    தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் கோஷமிடுகின்றன. தங்கள் கட்சியை சேர்ந்தவர்களே உண்மையான போராளிகள் என்று பறைசாற்றிக் கொள்கின்றன. 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai