Enable Javscript for better performance
முகநூலில் ரூ.8 கோடிக்கு விளம்பரங்கள் வெளியிட்ட கட்சிகள்: முதலிடத்தில் பாஜக- Dinamani

சுடச்சுட

    

    முகநூலில் ரூ.8 கோடிக்கு விளம்பரங்கள் வெளியிட்ட கட்சிகள்: முதலிடத்தில் பாஜக

    By DIN  |   Published on : 28th March 2019 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    facebook


    மக்களவைத் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், சமூக வலைதளமான முகநூலில் அரசியல் கட்சிகள் இதுவரை சுமார் ரூ.8 கோடி செலவிட்டு விளம்பரம் செய்துள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் பாஜக அதிக அளவில் விளம்பரம் செய்துள்ளது. 
    இதுதொடர்பாக முகநூல் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு அளித்துள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் 16-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் மொத்தமாக ரூ.6.88 கோடி செலவில் 34,048 விளம்பரங்களை முகநூலில் வெளியிட்டுள்ளன. அதுவே, மார்ச் 23-ஆம் தேதிக்குள்ளாக 41,514 விளம்பரங்களாக அதிகரித்துள்ளது. அவற்றுக்கு செய்யப்பட்ட செலவும் ரூ.8.38 கோடியாக உயர்ந்துள்ளது. 
    அதிகபட்சமாக, பாரத் கே மன் கீ பாத் என்ற முகநூல் பக்கத்தில் ரூ.2.23 கோடிக்கும் அதிகமாக சுமார் 3,700 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
    பாஜக முகநூல் பக்கத்தில் ரூ.7 லட்சம் செலவில் சுமார் 600 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மை ஃபர்ஸ்ட் வோட் ஃபார் மோடி, நேஷன் வித் நமோ போன்ற முகநூல் பக்கங்களிலும் விளம்பரங்களுக்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் முகநூல் பக்கத்தில் ரூ.2.12 லட்சம் செலவில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முகநூல் பக்கத்தில் பிப்ரவரி முதல் மார்ச் 23-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.5.91 லட்சம் செலவில் 410 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai