விரைவில் காங்கிரசில் இணைகிறேன்: ராகுலைச் சந்தித்த பின் சத்ருகன் பேட்டி 

விரைவில் காங்கிரசில் இணைய உள்ளதாக, தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலைச் சந்தித்த பிறகு, நடிகரும் பாஜக அதிருப்தி தலைவருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
விரைவில் காங்கிரசில் இணைகிறேன்: ராகுலைச் சந்தித்த பின் சத்ருகன் பேட்டி 

புது தில்லி: விரைவில் காங்கிரசில் இணைய உள்ளதாக, தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலைச் சந்தித்த பிறகு, நடிகரும் பாஜக அதிருப்தி தலைவருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் 30 ஆண்டுகள் தொடர்புடைய நடிகர் சத்ருகன் சின்ஹா,  அண்மைக் காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

பிகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் 2-ஆவது முறையாக எம்.பி.யாக பதவி வகித்து வரும் அவருக்கு, தற்போதைய தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஏற்கெனவே, பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பின்னர், தனது எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்று சத்ருகன் சின்ஹா கூறியிருந்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு பதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அங்கு போட்டியிடுகிறார். 

பாட்னா சாகிப் தொகுதியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படாததைத் தொடர்ந்து, அவர் காங்கிரஸில் இணைய வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகின. இந்நிலையில், பிகார் மாநில பிரசார குழு தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், பாட்னாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசும்போது, 'தில்லியில் வரும் 28-ஆம் தேதி காலை நடைபெறும் நிகழ்ச்சியில், காங்கிரஸில் சத்ருகன் சின்ஹா இணையவுள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார்' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளதாக, தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலைச் சந்தித்த பிறகு, நடிகரும் பாஜக அதிருப்தி தலைவருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தில்லி துக்ளக் மார்க்கில் உள்ள ராகுலின் இல்லத்தில் அவரைச் சந்தித்த பின்னர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய சின்ஹா, 'விரைவில் காங்கிரசில் இணைவேன். நவராத்திரி சமயத்தில் நாங்கள் உங்களக்கு நல்ல செய்தி கூறுகிறோம்' என்று தெரிவித்தார்.

அதேசமயம் வரும் ஏப்ரல் 6 - ஆம் தேதி சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைய உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஷக்திசின் கோஹில்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com