உ.பியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று விமர்சித்தாரா மோடி?: வெடித்தது புதிய சர்ச்சை 

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.   
உ.பியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று விமர்சித்தாரா மோடி?: வெடித்தது புதிய சர்ச்சை 

மீரட்: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.   

உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மோடி வியாழனன்று மீரட் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தள் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் பெயர்களில் இருந்து முதல் பகுதி / எழுத்தை எடுத்து அக்கூட்டணியை 'சராப்' என்று விமர்சித்தார்.          

'சராப்' என்ற உருது வார்த்தைக்கு கானல் நீர் / மாயம் என்று பொருள். ஆனால் ஹிந்தியில் இதே ஒலியில் அமைந்துள்ள 'ஷ்ராப்' என்ற வார்த்தைக்கு சாராயம் என்று பொருள்.

எனவே உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.   

இதுதொடர்பாக உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ்  தனது ட்விட்டர் பக்கத்தில், 'வெறுப்பின் மனதினை எங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், இரண்டு வார்த்தைகளுக்கு வித்தியாசம் தெரியாமல் மாயக்காட்சிகளை உருவாக்குகிறாரகள்' என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா செய் தியாளர்களிடம் பேசும்போது, 'இதுதான் ஒரு பிரதமர் பேசும் முறையா? இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? உங்கள் வார்த்தைகளை வாபஸ் பெற்று உ.பி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்' என்று மோடியிடம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com