மிஷன் சக்தி உரை பற்றி  எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணைய குழு தகவல் 

மிஷன் சக்தி உரை பற்றி  பிரதமர் அலுவலகம் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.
மிஷன் சக்தி உரை பற்றி  எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணைய குழு தகவல் 

புது தில்லி: மிஷன் சக்தி உரை பற்றி  பிரதமர் அலுவலகம் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.

300 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் உள்ள விண்ணில் உள்ள செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தி இருப்பதை பிரதமர் மோடி புதனன்று தொலைக்காட்சியில் அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பை முன்வைத்து விஞ்ஞானிகளின்  சாதனைகள் மூலம் பிரதமர் மோடி ஆதாயம் தேடக்கூடாது என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமீறல் என்று சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் செய்திருந்தன .

அதே சமயம் ‘மிஷன் சக்தி’ திட்டத்தின் வெற்றி தொடர்பாக புதனன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு  தேர்தல் விதிமீறலா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் புதன் இரவு தெரிவித்தது.

நாட்டின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட தேச பாதுகாப்பு தொடர்பான முடிவுகளோ மற்றும் பேரிடர் நிர்வாகம் தொடர்பான விஷயங்களோ தேர்தல் நடத்தை விதிமுறை வரம்புக்குள் வராது; எனவே அதற்கு முன்அனுமதி பெறத் தேவையில்லை என்ற பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மிஷன் சக்தி உரை பற்றி  பிரதமர் அலுவலகம் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணைய விசாரணை குழு இருமுறை சந்தித்து ஆலோசித்துள்ளது.பின்னர் நாட்டுக்கு பிரதமர் உரையாற்றுவதை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை என்று இந்தக்குழுவினர் தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com