
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் (2005) மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் நாளொன்றுக்கு தலா ரூ.229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய ஊரக வளர்ச்சித் துறை கடந்த 2013, பிப்ரவரி 26-இல் வெளியிட்ட அறிவிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மாநிலங்கள் வாரியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் விவரம் வருமாறு:
ஆந்திர பிரதேசம்- ரூ. 211, அருணாசால பிரதேசம்-ரூ.192, அஸ்ஸாம்- ரூ.193, பிகார்-ரூ.171, சத்தீஸ்கர் ரூ.176, கோவா-ரூ.254, குஜராத் -ரூ.199, ஹரியாணா - ரூ. 284, ஹிமாசல பிரதேசம் - (பட்டியல் அல்லாத பகுதிகளில்) ரூ. 185, பிற பகுதிகளில் ரூ. 231, ஜம்மு- காஷ்மீர் -ரூ.189, ஜார்க்கண்ட் -ரூ. 171, கர்நாடகம் - ரூ.249, கேரளம்-ரூ.271, மத்திய பிரதேசம் -ரூ.176, மகாராஷ்டிரம் ரூ.206, மணிப்பூர்-ரூ.219, மேகாலயா ரூ. 187, மிசோரம்-ரூ.211, நாகாலாந்து -ரூ.192, ஒடிஸா -ரூ.188, பஞ்சாப் -ரூ.241, ராஜஸ்தான் -ரூ.199, சிக்கிம் -ரூ.192, தமிழ்நாடு -ரூ.229, தெலங்கானா ரூ.211, திரிபுரா ரூ.192, உத்தர பிரதேசம்-ரூ.182, உத்தரகண்ட் -ரூ.182, மேற்கு வங்கம் -ரூ. 191, புதுச்சேரி -ரூ.229.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...