சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு விவகாரம்: காங்கிரஸ் மீது அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டு வெடித்து பலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் ஹிந்துக்களை குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய நிதி அமைச்சரும், பாஜக மூத்த
சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு விவகாரம்: காங்கிரஸ் மீது அருண் ஜேட்லி குற்றச்சாட்டு


சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டு வெடித்து பலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் ஹிந்துக்களை குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சென்ற சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 68 பேர் உயிரிழந்தனர்.
2010ஆம் ஆண்டில் இந்த வழக்கை பதிவு செய்து ஹரியாணா போலீஸ் விசாரணை நடத்தியது. பின்னர், 2010ஆம் ஆண்டில் தேசியப் புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் என்ஐஏ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணங்களால் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது நீதிமன்றம். இந்நிலையில், அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பில் ஹிந்து பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. ஆனால், தீர்ப்போ மாறுபட்டுள்ளது. தவறான நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. ஹிந்துக்களை தீவிரவாதிகள் என்று சித்திரித்த காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
2007ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களை பயங்கரவாதிகளாக சித்திரித்தது காங்கிரஸ். சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு பங்கிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் தெரிவித்தது.
 ஹிந்துக்களை குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் ஹிந்துக் கோயில்களுக்கு செல்கின்றனர்.
அவர்கள் கோயில்களுக்கு செல்வதுடன் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்பதையும் ஏற்றுக் கொண்டனர் என்றார் ஜேட்லி.
முன்னாள் மத்திய உள்துறை செயலரும், தற்போது பாஜகவில் உள்ளவருமான ஆர்.கே.சிங், சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தெரிவித்த கருத்துகள் குறித்து ஜேட்லியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, அது இப்போது முக்கியமில்லை. அப்போதைய மத்திய அரசு கூறியதையே அதிகாரிகள் வழிமொழிந்திருப்பார்கள் என்று பதிலளித்தார் ஜேட்லி.
எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பது மகா கூட்டணி கூட்டணியே அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் மிகவும் வலிமையாக உள்ளது. எந்தவொரு தனி கட்சியாலும் அவர்களை எதிர்க்க முடியாது. நாங்கள் இந்தியாவை காப்பதற்காக கூட்டணி அமைத்திருக்கிறோம். ஆனால், பாஜகவை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள மகா கூட்டணி குழப்பங்களின் கூட்டணி என்றார் அவர்.
சம்ஜௌதா குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நவ குமார் சர்கார் (எ) ஸ்வாமி அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சௌஹான், ராஜீந்தர் சௌதரி ஆகியோரை என்ஐஏ நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com