சுடச்சுட

  

  தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல்: கெளதம் கம்பீருக்கு நோட்டீஸ்

  By DIN  |   Published on : 01st May 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gowtham_gambir


  செய்தித்தாளின் விளம்பரப்படத்தில் இடம்பெற்று, தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் கெளதம் கம்பீருக்கு கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
  கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கெளதம் கம்பீர் போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தித்தாளில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியின் விளம்பரத்தில் கெளதம் கம்பீர் இடம்பெற்றிருந்தார். இதை கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஆராய்ந்தது. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியுள்ளதாகவும், இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அரசியல் ஆதாயம் தேடித் தரும் நோக்கிலும் உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி கருதினார்.
  இந்த விவகாரம் தொடர்பாக கெளதம் கம்பீருக்கும், அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்துக்கும் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்காகத் தேர்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற விவரத்தை மே மாதம் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai