சுடச்சுட

  

  வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தேசிய பங்குச் சந்தைக்கு செபி தடை

  By DIN  |   Published on : 01st May 2019 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nse


   தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட சில வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று செபி (இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்) தடை விதித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் என்எஸ்இ மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடன் பத்திரங்கள் சார்ந்த நடவடிக்கைகளில் என்எஸ்இ அடுத்த 6 மாதங்களுக்கு ஈடுபட முடியாது.
  தேசிய பங்குச் சந்தையில் உள்ள சில வர்த்தகர்களுக்கு சாதகமாக தொழில்நுட்பரீதியில் முறைகேடு
  நடைபெற்றுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முறைகேடு மூலம்  என்எஸ்இ ஈட்டிய ரூ.624.89 கோடி லாபத்தை முதலீட்டாளர் நல நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் செபி  உத்தரவிட்டுள்ளது.
  இந்த முறைகேட்டில் தொடர்புடைய என்எஸ்இ முன்னாள் இயக்குநர் ரவி நாராயண், முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா ஆகியோருக்கு முறைகேடு நடைபெற்ற காலத்தில் அளிக்கப்பட்ட ஊதியத்தில் 25 சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்கவும், பங்குச் சந்தை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  என்எஸ்ஐ வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு தலைவர் ரவி வாராணசி, கூடுதல் துணைத் தலைவர் சுப்ரபாத் லால் உள்ளிட்ட அதிகாரிகள் மீது 2 முதல் 3 ஆண்டுகள் வரை தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக என்எஸ்இ-யில் உள்ள சில பங்குச் சந்தை தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
  இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்ட ஆலோசனையைப் பெற்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai