சுடச்சுட

  

  மோடி பங்கேற்க உள்ள பேரணிக்கு எதிராக காங்., தேர்தல் ஆணையத்தில் புகார்: காரணம் என்ன தெரியுமா? 

  By IANS  |   Published on : 01st May 2019 05:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Narendra_Modi_PTI

   

  புது தில்லி: மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேர்தல் பேரணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

  மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணியில் பிரதர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். அங்குள்ள கஜ்லிவான் மைதானத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேர்தல் பேரணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

  இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சித் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலின் ஒரு பகுதியாக வரும் 6-ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் தாமோ பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

  இந்த இடமானது பிரதமர் மோடியின் தேர்தல் பேரணி நடைபெற உள்ள சாகர் மாவட்டத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

  அத்துடன் சாகர் மாவட்டத்தின் பண்டா, ரெஹ்லி மற்றும் தியோரி ஆகிய மூன்று தாலுக்காக்களும், தாமோ பாராளுமன்றத் தொகுதிக்கு கீழ்தான் வருகிறது. 

  எனவே மோடியின் பிரசாரமானது கண்டிப்பாக அங்கு நடைபெறும் வாக்குப்பதிவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

  இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியானது மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏப்ரல் 30-ஆம் தேதியன்று தகவல் தெரிவித்துள்ளது.

  அத்துடன் பிரதமர் எஸ்.பி,ஜி சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் காவலுக்கு கீழ் வருகிறவர் என்பதால் அவரது வருகையின் போது, அதிக அளவில் காவலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இதுவும் வாக்குபதிவின்போது சிக்கலை ஏற்படுத்தும்.

  இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai