சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை 

மத துவேஷப் பேச்சின் காரணமாக சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை 

புது தில்லி: மத துவேஷப் பேச்சின் காரணமாக சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்து, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் துறவி  சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத துவேஷப் பேச்சின் காரணமாக சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்  தேர்தல் பிரசாரம் செய்யும் போது, 'அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்' என்று பேசியிருந்தார். 

அவரது இந்த கருத்து தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் சார்பில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகார் மீது புதனன்று விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், வியாழன் காலை 6 மணியில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பிரசாரம் செய்ய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com