பிரிவினைவாதிகளை தான் மம்தா ஆதரிக்கிறார்: அமித் ஷா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார். 
பிரிவினைவாதிகளை தான் மம்தா ஆதரிக்கிறார்: அமித் ஷா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:

இப்போதும் பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. அடுத்ததும் பாஜக ஆட்சிதான் அமையப்போகிறது. நரேந்திர மோடி தான் நாட்டின் பிரதமராக இருப்பார். ஒருவேளை பாஜக ஆட்சி அமையவில்லை என்றால், எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரை நாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பார்கள்.

மேற்கு வங்கத்தில் இருந்து 30 தொகுதிகளை தாருங்கள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வாக்களியுங்கள், நாங்கள் 370 சட்டப்பிரிவை நீக்குகிறோம். ஆனால் இம்மாநில முதல்வர், பிரிவினைவாதிகளை ஆதரித்து வருகிறார். இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிப்போம் என்று கூறிய ஓமர் அப்துல்லாவின் கருத்துக்கு இன்று வரை மம்தாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 

என்ஆர்சியை அமல்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் சட்டவிரோத குடியேறிகள் களையெடுக்கப்படுவார்கள். ஒருகாலத்தில் தனது தனித்தன்மையான கலாசாரத்துக்காக அறியப்பட்ட மேற்கு வங்கம், தற்போது துப்பாகி, வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கள்ளச்சந்தையில் தயாரிக்கும் இடமாக மாறியுள்ளது. 

மம்தா பானர்ஜியின் ஆட்சிக்காலத்தில் இங்கு ஒரு தொழிற்சாலை கூட ஏற்படுத்தப்படவில்லை. வெடிச்சத்தங்கள் ரவீந்திரநாத்தின் சங்கீதத்தை சத்தமில்லாமல் ஆக்கிவிட்டது என்று விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com