சசி தரூர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான சசி தரூருக்கு வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சசி தரூர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி


காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான சசி தரூருக்கு வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்லக் கூடாது என தில்லி நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. வெளிநாடு பயணம் மேற்கொள்ள விரும்பினால், முன்அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்கச் செல்ல அனுமதி அளிக்கக் கோரி, சசி தரூர் தில்லி நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை விசாரித்த சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ், சசி தரூர் மே மாதம் 5-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கினார்.
சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நட்சத்திர விடுதி ஒன்றில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவத்தில் சசி தரூர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com