நிதி நிறுவன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் காவல் ஆணையரை விசாரிக்க ஆதாரம் கோரியது உச்சநீதிமன்றம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க காவல் துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்திருந்த வழக்கில், அவரை விசாரிக்க அனுமதியளிப்பதற்கு தேவையான
நிதி நிறுவன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் காவல் ஆணையரை விசாரிக்க ஆதாரம் கோரியது உச்சநீதிமன்றம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க காவல் துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்திருந்த வழக்கில், அவரை விசாரிக்க அனுமதியளிப்பதற்கு தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி  குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன் அவரை விசாரிக்க அனுமதி மறுத்தனர். 
இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குமார் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அப்போது, சிபிஐ சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி கோரினார். அதைக் கேட்ட நீதிபதிகள், நிதி நிறுவன மோசடி நடைபெற்றதற்கான ஆதாரத்தை ராஜீவ் குமார் மறைத்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டுகிறது. 
அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால்தான் நாங்கள் அனுமதி வழங்க முடியும் என்றனர். அதையடுத்து, இதுதொடர்பான ஆதாரங்களை புதன்கிழமை சமர்பிப்பதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. அதன் பின்னர் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமைக்கு(மே 1) ஒத்தி வைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடியை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக ராஜீவ் குமார் இருந்தார். அவரது தலைமையிலான விசாரணையின்போது, நிதி நிறுவன மோசடிக்கான ஆதாரத்தை அவர் அழித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டுகிறது. அதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முயன்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com