மோடி, அமித் ஷாவுக்கு எதிரான மனு: தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியது உச்சநீதிமன்றம்

 தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து மீறி வருவதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் தொடுத்துள்ள மனு
மோடி, அமித் ஷாவுக்கு எதிரான மனு: தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியது உச்சநீதிமன்றம்


 தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து மீறி வருவதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் தொடுத்துள்ள மனு குறித்து தேர்தல் ஆணையத்தின் பதிலை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கௌல், கே.எம். ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவின் மனு குறித்து பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
மேலும், சுஷ்மிதா தேவ் புகாரின் மீது தேர்தல் ஆணையம் சுதந்திரமாக உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பின்னணி: அஸ்ஸாம் மாநிலம், சில்சார் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சுஷ்மிதா தேவ். காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவராகவும் அவர் உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் அவர், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கின்றன. 
ஆனால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அதனை மீறும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்; அரசியல் நோக்கத்துக்காக மத்தியப் பாதுகாப்புப் படைகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கதில்லை. ஆதலால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com