சுடச்சுட

  

  ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரிடம் பாஜக குதிரை பேரம்: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 02nd May 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  manees


  பாஜகவில் இணையுமாறு கூறி, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேருக்கு தலா ரூ.10 கோடி லஞ்சம் கொடுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டது என்று  ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டினார்.
  இது குறித்து மணீஷ் சிசோடியா கூறியதாவது: தில்லியில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக  குறைகூறுவதற்கு  பாஜகவுக்கு இப்போது எந்த விவகாரமும் கிடைக்கவில்லை. இதனால், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஏழு பேருக்கு  தலா ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்து, அவர்களை தங்கள் வசம் இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க  பாஜக முன்பு முயற்சி செய்தது. ஆனால், அதற்கு மக்கள் உரிய பதிலை அளித்தனர். தற்போதும் பொருத்தமான பதிலை அக்கட்சிக்கு மக்கள் அளிப்பர்.
  மேற்கு வங்க மாநிலத்தில்  திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், பொதுத் தேர்தலில் பாஜக வென்றவுடன் அந்தக் கட்சியை விட்டு விலகிவிடுவார்கள் என்றும் பிரதமர் கூறியிருப்பது  அவரது பதவிக்கு அழகல்ல. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை அவர் உணர வேண்டும் என்றார் சிசோடியா.
  பாஜக பதிலடி: ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.  இது குறித்து பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் அசோக் கோயல் கூறுகையில், தேர்தலில் தோல்வியுற்று வருவதால்,  ஆம் ஆத்மி கட்சி குழப்பத்தில் உள்ளது. அதன் தலைவர்கள் வினோதமான குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர். இதன் மூலம், மக்களின் கவனத்தை வேண்டுமென்றே திசை திருப்ப ஆம் ஆத்மி கட்சியினர் முயன்று வருகின்றனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் அதிருப்தியை தடுத்து நிறுத்த  கேஜரிவாலால் முடியவில்லை. இதன் காரணமாக, அக்கட்சியின் உள் பிரச்னைகளில் பாஜகவின் பெயரை தேவையில்லாமல் இழுக்கின்றனர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai