சுடச்சுட

  

  சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதில் புல்வாமா தாக்குதல் இடம்பெறாதது ஏன்? வெளியுறவுத் துறை விளக்கம்

  By DIN  |   Published on : 02nd May 2019 07:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  masood_azhar


  மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்ததில் புல்வாமா தாக்குதல் இடம்பெறாதது குறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 

  ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. ஆனால், இதில் புல்வாமா தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

  இந்த நிலையில் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுகுறித்து தெரிவிக்கையில், 

  "குறிப்பிட்ட ஒரு சம்பவத்துக்காக மசூத் அஸார் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படவில்லை. மசூத் அஸார் தொடர்பான பயங்கரவாத சம்பவங்கள் குறித்து இந்தியா சமர்பித்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

  மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படவேண்டும் என்பது தான் நமது நோக்கம். இதை புரிந்துகொள்ளவேண்டும். இதற்கான நடவடிக்கை 2009, 2016-2017 ஆகிய ஆண்டுகளிலேயே மேற்கொள்ளப்பட்டது. 

  இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்கள் குறித்து எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த தீர்மானத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன் என்பதற்கு சீனா ஏற்கெனவே விளக்கம் தந்துள்ளது" என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai