Enable Javscript for better performance
சுவிஸ் வங்கியில் நம்மால் ஒரு அக்கவுண்ட் தொடங்க முடியுமா? முடியும் இதோ வழி!- Dinamani

சுடச்சுட

  

  சுவிஸ் வங்கியில் நம்மால் ஒரு அக்கவுண்ட் தொடங்க முடியுமா? முடியும் இதோ வழி!

  By Jesu Gnanaraj  |   Published on : 09th May 2019 01:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  swiss_bank

   

  ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் கட்சித் தலைவர்கள் மறக்காமல் சொல்லும் விஷயம்.. சுவிஸ் பேங்க்கில் இருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்பதுதான்!

  அவ்வாறு இந்தியர்களின் கருப்புப் பணத்தை மத்திய அரசால் கொண்டு வர முடியுமா? சுவிஸ் வங்கிகளின் செயல்முறைகளைப் பற்றித் தெறிந்துகொண்டால் தான் அது உங்களுக்குப் புரியும்!

  41,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு ஐரோப்பிய சுவிஸ்ட்சர்லாந்து நாட்டில் காடுகள், மலைகள்( ஆல்ப்ஸ் மலையை மறக்க முடியுமா?) போக, விவசாய நிலம் 15,000,00 ஹெக்டேர் மட்டுமே!(100 ஹெக்டேர் ஒரு சதுர கிலோ மீட்டர்). ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையிலான 6 மாதத்தில் ஒரு போகம் மட்டுமே விவசாயம்! மீதி நாட்களில் குளிரிலும் பனியிலும் மரங்கள் இலைகளை இழந்து மொட்டையாக காட்சியளிக்கும்.

  ஜெர்மனியை ஒட்டி இருக்கும் பாதிப் பகுதியில் வாழும் மக்கள் ஜெர்மன் மொழியும் பிரான்ஸ் அருகில் இருக்கும் மக்கள் பிரெஞ்சு மொழியும் பேசுகிறார்கள். Liechtenstein போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் கருப்புப் பணம் டெபாசிட் செய்கிறார்கள் என்றாலும் சுவிஸ் அளவுக்கு வேறு எந்த நாடும் பரபரப்பாகப் பேசப் படவில்லை என்பதே உண்மை!

  1932 ம் ஆண்டு பிரெஞ்சு ரெய்டுக்குப் பின், 1934 ஆண்டு சுவிஸ் நாட்டின் அனைத்து வங்கிகளும் இணைந்து இயற்றிய சட்டம் தான் "வெளிநபர் யாருக்கும் வாடிக்கையாளர்களின் விபரங்களை கொடுப்பது கிரிமினல் குற்றம்". அந்த சட்டம் தான் காலப்போக்கில், சுவிஸ் வங்கிகள் நாஜிக்களின்( ஹிட்லர் குரூப் ) செல்வத்தை மறைக்கவும், தன் முழு விவரத்தையும் வெளி உலகுக்கு சொல்லத் தயங்கியவர்களுக்கும் கை கொடுத்தது! அந்தவகையில் ரகசிய கணக்கு என்பது நீண்ட வரலாறு கொண்டது!

  ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. சுவிஸ் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக, ரகசியம் காக்கும் நாட்கள் முடிந்துவிட்டன! இப்போது அனைத்து சுவிஸ் வங்கிகளும் income tax மற்றும் கிரிமினல் சம்பந்தமான வழக்குகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றன. சொல்லப்போனால், இப்போது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் பணியாற்றத் தயங்குகின்றன என்பது தான் உண்மை!

  இந்த வங்கிகளில் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டுமென்றால் online ல் எல்லாம் திறக்க முடியாது. வெளிநாட்டினர் முதலில் பேங்கில் அப்பாயிண்மென்ட் வாங்கி நேரில் போகவேண்டும். அப்போது தான் பேங்க், தன் customer பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் 100 க்கும் மேற்பட்ட பேப்பர்களில் கையெழுத்திட வேண்டும். ஆம்! தற்போதைய கட்டுப்பாடுகளால், மிகவும் கண்டிப்பான procedure இருக்கிறது. பாஸ்போர்ட் மட்டுமல்லாது, பணம் வந்ததற்கான வழியையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். கோடிக்கணக்கான பணம் என்னும் போது, அதாவது நகை அல்லது சொத்து விற்றது என்றால் அதற்கான முறையான டாக்குமெண்ட்கள் காட்டப்பட வேண்டும்.

  எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே அக்கவுண்ட் திறப்பார்கள். அதுவும் உங்கள் பெயரில் இருக்காது. ஒரு நம்பர் மட்டுமே உங்களுக்குத் தருவார்கள். அக்கவுண்ட் ஓப்பன் செய்தபின் உங்களுக்கென்று ஒரு டெல்லர் இருப்பார். அவருக்கு மட்டுமே உங்கள் நம்பரை வைத்து உங்களின் முழு விபரங்களையும் எடுக்க முடியும். பணம் மட்டுமல்லாமல் தங்கத்தையும் இங்கு சேமிக்க முடியும் என்பது கூடுதல் சந்தோஷமான விஷயம்!

  கடைசியாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தருவார்கள். அதை நீங்கள் உபயோகித்தால் இதுவரை கட்டிக் காத்த இரகசியம் உலகுக்கு அம்பலம் ஆகிவிடுமே! ஜாக்கிரதை!!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai