சுடச்சுட

  

  முறைகேடு வழக்கு: மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்குக்கு நீதிமன்றம் அழைப்பாணை

  By DIN  |   Published on : 02nd May 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் முன்னாள் ஊழியருக்கு எதிரான மோசடி வழக்கில் சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஸ்ரீபாத் நாயக்குக்கு கோவா நீதிமன்றம் புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது. 
  வழக்கு தொடர்பாக தன்னிடம் ஏதேனும் ஆதார ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், அவற்றுடன் வரும் ஜூன் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்குக்கு அனுப்பியுள்ள அழைப்பாணையில் பனாஜி நீதித்துறை நடுவர் விஜயலக்ஷ்மி ஷிவோல்கர் அறிவுறுத்தியுள்ளார். 
  ஸ்ரீபாத் நாயக்கின் முன்னாள் ஊழியரான வினோத் தேசாய்க்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின்படி, மெர்வின் ஃபெர்ணான்டஸ் என்பவருக்கு கோவா அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வினோத் தேசாய் அவரிடம் ரூ.6 லட்சம் கேட்டுள்ளார். அதில் ரூ.2 லட்சத்தை அவர் முன்பணமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது. 
  இந்நிலையில், உறுதியளித்தபடி தனக்கு அரசு வேலை வாங்கித் தராததை அடுத்து, வினோத் தேசாய்க்கு அளித்த பணத்தை மெர்வின் ஃபெர்ணான்டஸ் திருப்பி கேட்டுள்ளார். இதையடுத்து வினோத் தேசாய் ரூ.1 லட்சத்துக்காக மெர்வினுக்கு அளித்த காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. 
  பின்னர் வினோத் தேசாய்க்கு எதிராகக் கடந்த 2018 செப்டம்பர் 20ஆம் தேதி பழைய கோவா காவல் நிலையத்தில் மெர்வின் புகார் அளித்தார். அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், 5 சாட்சியங்களில் ஒருவராக ஸ்ரீபாத் நாயக்கின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai