ஆட்சியில் இருந்தபோது மக்களை ஏமாற்றியது சமாஜவாதி, பகுஜன் சமாஜ்: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் மக்களை ஏமாற்றி வந்தன என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சியில் இருந்தபோது மக்களை ஏமாற்றியது சமாஜவாதி, பகுஜன் சமாஜ்: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு


உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் மக்களை ஏமாற்றி வந்தன என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், சமாஜவாதி  பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நாட்டிலேயே மிக அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் என்பதால் இரு தரப்புமே தீவிர தேர்தல் பிசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஸ்தி பகுதியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உத்தரப் பிரதேசத்தில் 7 முறை முதல்வர்களாக இருந்துள்ளனர். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் மாநில மக்களைத் தொடர்ந்து ஏமாற்றியே வந்தனர். உண்மையில் அந்த இருகட்சிகளும் வளர்ச்சிக்கு எதிரானவை; முன்னேற்றத்தைத் தடுக்கும் விஷம் போன்றவை.
அதே நேரத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மாநிலத்தில் ரெளடிகள் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் தேசத்துக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கும். பயங்கரவாதத்துக்கு உரிய பதிலடி கொடுத்து, தேசத்தின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்திய பிரதமர் மோடியின்ஆட்சி வேண்டுமா? அல்லது ஆட்சி அதிகாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற கட்சிகள் வேண்டுமா? என்பதை மக்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒருபுறம் வலுவான தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். மறுபுறம் தேசம் குறித்த எவ்வித உயர்ந்த நோக்கங்களும் இல்லாத, அதிகார வேட்கையில் திரியும் கூட்டம் உள்ளது. இதில் எது நாட்டு நல்லது என்பது உங்களுக்குத் தெரியும் என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com