இந்தியா மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை: அமெரிக்கா திட்டவட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலில் இந்தியா ஈடுபடுவதாக பாகிஸ்தான் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. 


ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலில் இந்தியா ஈடுபடுவதாக பாகிஸ்தான் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. 
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், மத்திய ஆசியக்கண்ட விவகாரங்கள் துறையின் தலைமை துணைநிலை உதவி செயலர் ஆலிஸ் வெல்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானில் நிகழ்த்தப்படும் தீவிரவாத செயல்களை ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் கூறி வரும் புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அதேசமயம், பயங்கரவாதத்தை எந்த நாடு ஊக்குவித்தாலும் அதை அமெரிக்கா தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும். எந்த ஒரு நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயலையும் அமெரிக்கா எக்காரணத்தைக் கொண்டும் பொருத்தருளாது. அதுமட்டுமின்றி, மற்றொரு நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்த ஒரு நாட்டின் செயலையும் அமெரிக்கா ஆதரிக்காது.
அதேபோல, பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கக் கூடிய எந்த ஒரு பயங்கரவாதக்குழுவும், தனக்கு சாதகமான நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். 
இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், அங்கு தீவிரவாதச் செயல்கள் குறைந்துள்ளன என்று தெரிவித்தார். 
கடந்த 2016ஆம் ஆண்டு ஈரானில் இருந்து பலூசிஸ்தான் மாகாணம் வழியாக நுழைந்து பாகிஸ்தானில் இருந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டு வந்ததாக, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டார்.  
அவருக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது, தூக்கு தண்டனைக்கு எதிராக இந்தியா, சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று  வருகிறது. இந்நிகழ்வையும், பாகிஸ்தானில் ஆப்கன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையும் முன்னிலைப்படுத்தியே, இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com