ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.13 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.13 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிகழாண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1. 06 லட்சம் கோடியாக இருந்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கிடைத்த அதிகபட்ச வருவாயாக இது இருந்தது. இந்நிலையில், 20192020ஆம் நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததையடுத்து, இந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1. 13 கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 
கடந்த நிதியாண்டின் மாத சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ. 98, 114 கோடியாக இருந்தது. அதனுடன்  ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாதம் 16.05 சதவீதம் அதிகமாக வரி வசூல் ஆகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஏப்ரல் மாதத்தில் ரூ. 1, 13, 865 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. அதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 21,163 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 28, 801 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 54,733 கோடியாகவும், தீர்வை ரூ. 9,168 கோடியாகவும் உள்ளன. ஜிஎஸ்டிஆர்3பி படிவத்தில் விற்பனை கணக்கு விபரங்களை சமர்ப்பித்தோரின் மொத்த எண்ணிக்கை 72.13 லட்சமாக உள்ளது. 
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ. 20, 370 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ. 15, 975 கோடியும் வழக்கமான முறையில் அளிக்கப்பட்டது. இறுதியாக, அனைத்து ஒதுக்கீடுகளுக்கும் பின்னர், ஏப்ரல் மாதத்தில், மத்திய அரசுக்கு மத்திய ஜிஎஸ்டி மூலமாக ரூ. 47, 533 கோடியும், மாநில அரசுக்கு மாநில ஜிஎஸ்டி மூலமாக ரூ. 50, 766 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com