ஒடிஸாவில் நாளை கரையைக் கடக்கிறது பானி புயல்

ஒடிஸாவில் நாளை கரையைக் கடக்கிறது பானி புயல்

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 3) கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 3) கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், வெள்ளிக்கிழமை (மே 3) பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்கத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிஸா அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும்  வியாழக்கிழமை 
முதல் ஒடிஸா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், பானி புயல் காரணமாக, ஒடிஸாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com