சாத்வி பிரக்யா பிரசாரம் செய்ய 3 நாள் தடை

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர், 3 நாள்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை தடைவிதித்தது.
சாத்வி பிரக்யா பிரசாரம் செய்ய 3 நாள் தடை


மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர், 3 நாள்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை தடைவிதித்தது.
பயங்கரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்கரேவை விமர்சித்ததாகவும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததற்காகவும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இந்தத் தடை அமலுக்கு வந்தது.
அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், இனி இதுபோன்று பேசக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
முன்னதாக, பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் என்னை சித்தரவதை செய்ததால் சாபமளித்தேன். அதனால்தான் அவர் மும்பையில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என்று தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். மேலும், பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
கர்கரே குறித்த கருத்துக்கு விளக்கமளித்த சாத்வி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நான் எந்த அளவுக்கு துன்புறுத்தலுக்கு உள்ளானேன் என்பதை மக்களுக்கு விளக்குவதற்காகவே அவ்வாறு கருத்துத் தெரிவித்தேன் என்றார். மேலும், பாபர் மசூதி இடிப்பு விஷயத்தில் எனது மனசாட்சியின்படிதான் கருத்துக் கூறினேன் என்று சாத்வி விளக்கமளித்தார். 
இந்நிலையில், அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், 3 நாள் பிரசாரத்தில் ஈடுபடத் தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com