பிரதமருக்கு எதிராக கருத்து: சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
பிரதமருக்கு எதிராக கருத்து: சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சித்து, பிரதமர் மோடியை திருடன் என்று குறிப்பிட்டார்.  இதுதொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சித்துவுக்கு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை (மே 2) மாலைக்குள் அவர் பதிலளிக்க அறிவுறுத்தியுள்ளது. 
மேலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளின்படி, கட்சித் தலைவர்களோ, வேட்பாளர்களோ எதிர் தரப்பினர் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்பதை அந்த நோட்டீஸில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அவகாசத்துக்குள் அந்த நோட்டீஸுக்கு சித்து பதிலளிக்காவிட்டால், அடுத்த அறிவிப்பின்றி தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலும். 
கடந்த மாதம், பிகாரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மோடியை தோற்கடிக்கும் வகையில் வாக்களிக்குமாறு முஸ்லிம் வாக்காளர்களை சித்து தூண்டியதாக எழுந்த சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com