பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கிறார் மம்தா: அமித் ஷா

இந்தியாவில் இருந்து ஜம்முகாஷ்மீரை பிரிக்க விரும்பும் நபர்களுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆதரவளிக்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கும் கட்சி நிர்வாகிகள்.
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கும் கட்சி நிர்வாகிகள்.


இந்தியாவில் இருந்து ஜம்முகாஷ்மீரை பிரிக்க விரும்பும் நபர்களுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆதரவளிக்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலம், கல்யாணியில் பாங்கோன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித் ஷா புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். வரும் காலத்திலும், நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார். அதேநேரத்தில், மத்தியில் பாஜக ஆட்சியை விட்டு போகும் நேரம் வந்தாலும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாக காஷ்மீர் இருப்பதை உறுதி செய்ய போராடும்.
இந்தியாவிலிருந்து ஜம்முகாஷ்மீரை பிரிக்க விரும்புவோருக்கு மம்தா பானர்ஜி ஆதரவளிக்கிறார். நாட்டுக்கு 2 பிரதமர்கள் வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா வலியுறுத்துகிறார். இதுதொடர்பான தனது நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி தெளிவுப்படுத்த வேண்டும்.
ஊடுருவல்காரர்கள், நமது நாட்டுக்கு கரையான் போன்றவர்கள். அவர்கள் நமது நாட்டின் ஆதாரங்களை தங்களது தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஊடுருவல்காரர்களை தேடி கண்டுபிடித்து, நாட்டை விட்டு விரட்டியடிக்கும்.
மேற்கு வங்கத்தில் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சியில், மேற்கு வங்க மாநிலம், ஊடுருவல்காரர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசின் ஆட்சியில் வெடிகுண்டு தயாரிப்பு ஆலைகள்தான் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடியது. ஆனால் இத்தாக்குதலைக் கண்டு பாகிஸ்தானோடு சேர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகிய 2 தனிநபர்கள் மட்டும் வருத்தப்பட்டனர். தேச பாதுகாப்பை விட, வாக்கு வங்கிகள் மீதான பாதுகாப்பு மீதே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com