சுடச்சுட

  


  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
  பூஞ்ச் மாவட்டம், ஷாபூர் மற்றும் கிர்னி செக்டார் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். சிறிய ரக துப்பாக்கிகள் மூலம் சுட்டதுடன், மோர்ட்டார் குண்டுகளையும் வீசினர். இதற்கு அப்பகுதியில் இருந்த இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
  ரஜௌரியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த மாதம் 15ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதையடுத்து பாகிஸ்தான் படையினர் எல்லையில் அத்துமீறல் எதிலும் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் அமைதி நிலவி வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் படையினர் முதல்முறையாக தற்போது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  புல்வாமா பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து, பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின்  முகாம் மீது இந்திய விமானப்படை போர் விமானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தாக்குதல் தொடுத்தன. 
  இதைத் தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் 
  காயமடைந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai