Enable Javscript for better performance
தேர்தல் பிரசாரத்துக்கு சிறார்களை பயன்படுத்தியதாக பிரியங்காவுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பிரசாரத்துக்கு சிறார்களை பயன்படுத்தியதாக பிரியங்காவுக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 03rd May 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    priyanka_gandhi


    சிறார்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவுக்கு தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    பிரியங்காவுக்கு எதிராக புகார் யார் தெரிவித்தது அல்லது புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பிரியங்கா முன்பு சிறார்கள் நின்றுகொண்டு கடுஞ்சொற்களை பிரயோகிப்பது போன்ற விடியோவை என்சிபிசிஆர் குறிப்பிட்டுள்ளது.
    நோட்டீஸில், சிறார்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    2014ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி இதுதொடர்பாக மும்பை உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதையும் அந்த ஆணையம் நோட்டீஸில் மேற்கோள்காட்டியுள்ளது.
    மேலும், 3 தினங்களுக்குள் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் குறித்த விவரங்கள், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் பெயர்கள் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai