சுடச்சுட

  


  மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
  கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தாதாபூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்தப் பகுதிக்கு புதன்கிழமை வந்த நக்ஸலைட் தீவிரவாதிகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். அதில் 27 வாகனங்கள் தீக்கிரையாகின.
  இதைத் தொடர்ந்து, நக்ஸலைட் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வனத்துக்குள் அதிரடி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குர்ஹேதா பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகனம் வந்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை நக்ஸலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இதில் 15  போலீஸாரும், கிராமவாசி ஒருவரும் பலியாகினர்.
  இந்நிலையில், நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கட்சிரோலியில் உள்ள கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை மூடப்பட்டன. கட்ச்ரோலி மாவட்டத்தின் முக்கிய சந்தை பகுதிகளான குர்ஹேதா, வத்சா உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்
  பட்டன.
  எச்சரிக்கைப் பதாகைகள்: இதனிடையே, கட்சிரோலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுமான நிறுவனத்தினரை எச்சரித்து நக்ஸலைட்டுகள் வியாழக்கிழமை ஆங்காங்கே பதாகைகள் வைத்திருந்தனர். 
  இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலை கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தினரை எச்சரித்து நக்ஸலைட்டுகள் ஆங்காங்கே பதாகைகள் வைத்திருந்தனர். அதில், இந்த வளர்ச்சி பணிகள் உள்ளூர் மக்களுக்காக செய்யப்படவில்லை. பணக்காரர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்படுகிறது. புதிய இந்தியா என்ற பெயரில் ஹிந்து நாட்டை உருவாக்க இந்த அரசு முயற்சித்து வருகிறது. மக்கள் இந்த அரசின் கனவைத் தகர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதாகைகளை காவல் துறையினர் அப்புறப்படுத்திவிட்டனர். வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai