சுடச்சுட

  
  Cyclone Fani Live Updates

  பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கத் தொடங்கியது. 

  வங்கக் கடலில் உருவான அதி தீவிர பானி புயல் ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் வெளிப்பகுதி கரையை கடக்கத் தொடங்கியதால் ஒடிசாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அங்கு மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசி வருகிறது. 

  பானி புயல் முன்னெச்சரிக்கையாக, ஒடிசாவில் கடற்கரையோரத்தில் வசிக்கும் 11.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 103 ரயில்களை ரத்து செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. பானி புயல் கரையை கடப்பதால் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

  இதேபோல், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பானி புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai