சுடச்சுட

  

  லோக்பால் அமைப்புக்கு விரைவில் நிரந்தர அலுவலகம்: மத்திய அரசு

  By DIN  |   Published on : 03rd May 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  judge


  ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்புக்கு விரைவில் நிரந்தர அலுவலகம் அமைக்கப்படும் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. 
  ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நோக்கில், லோக்பால் அமைப்பை மத்திய அரசு அண்மையில் அமைத்தது. அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட பினாகி சந்திர கோஷுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், லோக்பால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி, தில்லியில் கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது.
  இதில், முன்னாள் நீதிபதிகள் திலீப் பி. போஸ்லே, பிரதீப் குமார் மொஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர் லோக்பால் அமைப்பின் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) எல்லையோர ஆயுதப் படையின் முதல் பெண் தலைவரான அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநில முன்னாள் தலைமைச் செயலர் தினேஷ் குமார் ஜெயின், இந்திய வருவாய்ப் பணி முன்னாள் அதிகாரி (ஐஆர்எஸ்) மகேந்திர சிங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இந்திரஜித் பிரசாத் கெளதம் ஆகியோர் லோக்பால் அமைப்பின் நீதித்துறை சாராத உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
  லோக்பால் அமைப்புக்கான அலுவலகம், தில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கான செலவு குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்தியப் பணியாளர் நல அமைச்சகம் அளித்துள்ள பதிலில், லோக்பால் அமைப்புக்கான நிரந்தர அலுவலகத்தைத் தேடி வருகிறோம். விரைவில் இப்பணிகள் முடிவடையும். இதுவரை அந்த ஐந்து நட்சத்திர விடுதிக்குக் கட்டணமாகப் பணமேதும் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai