சுடச்சுட

  
  kejrival


  எந்தக் கட்சிகள் பணம் கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொண்டு ஆம் ஆத்மிக்கே வாக்களிக்குமாறு அந்தக் கட்சி வாக்காளர்களை தூண்டியதாக கூறப்படுவது குறித்து தில்லி தேர்தல் அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. 
  தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளது. அதில், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பணம் கொடுத்தால், அதை வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மிக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி தேர்தல் அலுவலகத்தில் பாஜக வியாழக்கிழமை புகார் அளித்தது. பாஜக மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா இந்தப் புகார் மனுவை அளித்தார். மேலும், இது தொடர்பாக தனது சுட்டுரையிலும் அவர் குறிப்பிட்டிருந்தார். 
  கேஜரிவால் பதிலடி: விஜேந்தர் குப்தாவின் அந்தப் பதிவை சுட்டிக் காட்டி, கேஜரிவால் தனது சுட்டுரையில், கட்சிகள் வழங்கும் பணத்தை பெற்றுக்கொண்டு, ஆம் ஆத்மிக்கே வாக்களிக்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்வதில் பாஜகவினருக்கு என்ன பிரச்னையுள்ளது; அப்படியென்றால், பாஜக மக்களுக்கு பணம் வழங்குகிறதா? எனக் கேட்டிருந்தார். 
  மூடத்தனமாக நடந்துகொள்கிறார்-ஜேட்லி: இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த ஜேட்லி, முதல்வருக்குரிய எந்தத் தகுதியும் இல்லாமல் கேஜரிவால் மூடத்தனமாக நடந்து வருகிறார் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai