பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் ரூ.1.6 கோடி மதிப்புள்ள பங்களா: இப்போ இதுதாங்க ஹாட் நியூஸ்

விக்ரமாதித்தன் கதைகளையே விஞ்சும் அளவுக்கு இருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணியன் வாழ்க்கை.
பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் ரூ.1.6 கோடி மதிப்புள்ள பங்களா: இப்போ இதுதாங்க ஹாட் நியூஸ்


பெங்களூரு: விக்ரமாதித்தன் கதைகளையே விஞ்சும் அளவுக்கு இருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணியன் வாழ்க்கை.

மகாதேவபுராவில் உள்ள ரூ.1.6 கோடி மதிப்பிலான வில்லாவில் வசித்து வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி. இவரது பணிக்கும், சொத்துக்கும் சம்பந்தமில்லாததால், அக்கம் பக்கத்தினர் இவர் மீது வருமான வரித்துறையில் புகார் அளித்தார்கள். யாருடைய பினாமியாகவோ இவர் செயல்படுவதாகவே சந்தேகிக்கப்பட்டது.

இவரை தொடர்ந்து கண்காணித்து வந்த வருமான வரித்துறையினர், அதிரடியாக இவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போதுதான் பல உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. அதாவது, பெங்களூருவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியை நிர்வகித்து வரும் ஆஸ்திரேலிய பெண் லேரி. 

இவரை பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டுக்கும் சுப்ரமணியம்தான் அழைத்துச் செல்வார். அவரது பணிவு மற்றும் கடமையால் ஈர்க்கப்பட்ட லேரி அவரது ஏழ்மையைப் பார்த்து, சுப்ரமணியத்துக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினார். அதற்காக மிகப்பெரிய வில்லா ஒன்றை வாங்கி பரிசளித்தார். அப்போதுதான் அவர் யாருக்கும் பினாமி இல்லை என்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல நேற்று பரவியது.

இதையடுத்து அதேப் பகுதியைச் சேர்ந்த பாஜக அமைச்சர் அரவிந்த் லிம்பாவலியின் பணம்தான் அது என்று தகவல்கள் கசிந்ததால், அதற்கு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com