சுடச்சுட

  

  மேற்கு வங்கத்தில் வலுப்பெற்ற ஃபானி புயல்: ஒடிஸாவில் 6 பேர் சாவு?

  By DIN  |   Published on : 03rd May 2019 09:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cyclone_fani

   

  ஒடிஸாவில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த ஃபானி புயல், காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ஒடிஸாவில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையுடன் ‘ஃபானி’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. 

  ஒடிஸாவின் புரி, தலைநகா் புவனேசுவரம் ஆகிய நகரங்களும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.

  புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

  இந்நிலையில், புயல் பாதிப்புகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த 43 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலாகவும் அமைந்தது. தற்போது இந்த ஃபானி புயல் மேற்கு வங்கத்தை நோக்கி வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai