சுடச்சுட

  

  சந்திராயன்-2 மூலம் நிலவில் உள்ள தாதுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்: முன்னாள் இஸ்ரோ தலைவர் பேட்டி

  By ANI  |   Published on : 03rd May 2019 03:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chandrayan--2

   

  நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை எனில் அது சந்திராயன்-1 திட்டம் என்று கூறலாம். நிலவின் வட்டப் பாதையில் சந்திராயன்-1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்திராயன்-1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

  மேலும் சந்திராயன், நிலவில் நீர்வழித் தடங்கள் தெரிவதாக கூறியது. இந்தக் கண்டுபிடிப்பு இதுவரை எந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் செய்யாதது ஆகும். அதன்பின் சில நாள்களில் இந்தியாவின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்தது.

  இந்நிலையில், சந்திராயன்-2 குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் ஜி.மாதவன் நாயக் கூறுகையில்,

  ஜூலை 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிக்குள்ளாக சந்திராயன்-2 திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திராயன்-2 செப்டம்பர் 6-ஆம் தேதி நிலவுக்கு சென்றடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது மிகவும் சுவாரஸியமான திட்டமாகும். இதன்மூலம் நிலவில் உள்ள தாதுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவித்தார். 

  ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விண்கலம் மட்டுமின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திராயன்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். 

  2013-இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது.
  அதன்படி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாகவே இந்த ரோவர் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ களம் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai