ஃபானி புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு முன்கூட்டியே ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடி

ஃபானி புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடியை முன்கூட்டியே ஒதுக்கியிருருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஃபானி புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு முன்கூட்டியே ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடி


ஹிண்டான்: ஃபானி புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.1000 கோடியை முன்கூட்டியே ஒதுக்கியிருருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்கள் கடினமான நேரத்தை சந்திக்கும் போது, அவர்களுடன் எப்போதும் மத்திய அரசு இருக்கும் என்றும் மோடி கூறியுள்ளார்.
 

ராஜஸ்தான் மாநிலத்தில்  இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஃபானி புயல் கரையைக் கடந்துவிட்டதையும், தற்போது அது தீவிரப் புயலாக வலுவிழந்துவிட்டதாகவும் மக்களிடம் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ஒடிஸாவின் கடற்கரையோர மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. சில மணி நேரம் முன்பு கூட அரசு அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு புயல் நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்கூட்டியே ரூ.1,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைப் படை, இந்திய கடலோர காவற்படை, கப்பற்படை மற்றும் ராணுவமும் புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் மோடி கூறினார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், உங்களுடன் நாட்டு மக்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதே அது என்றும் மோடி பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com