ஃபானி புயலால் ஒடிஸாவில் மூன்று பேர் பலி: தீவிரப் புயலாக வலுவிழந்தது

ஒடிஸாவில் இன்று கரையைக் கடந்த ஃபானி புயல், காரணமாக புரி மாவட்டத்தில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபானி புயலால் ஒடிஸாவில் மூன்று பேர் பலி: தீவிரப் புயலாக வலுவிழந்தது


ஒடிஸாவில் இன்று கரையைக் கடந்த ஃபானி புயல், காரணமாக புரி மாவட்டத்தில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரி மாவட்டம் சக்திகோபால் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.
 

நயாக்ரா மாவட்டத்தில் குடிநீர் எடுக்கச் சென்ற பெண் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிஸாவில் ஃபானி புயல் காரணமாக ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் கரையைக் கடந்த ஃபானி புயல், தற்போது அதி தீவிரப் புயலாக இருந்து தீவிரப் புயலாக வலு குறைந்த நிலையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் இன்று கொல்கத்தா உட்பட மேற்கு வங்க மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுவிட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com