ஃபானி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: மம்தா பானர்ஜி

தீவிரப் புயலாக வலுக் குறைந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபானி புயலை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஃபானி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: மம்தா பானர்ஜி


கொல்கத்தா: தீவிரப் புயலாக வலுக் குறைந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபானி புயலை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் மம்தா பானர்ஜி, பாதுகாப்பாக இருக்குமாறும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

கொல்கத்தாவுக்கு தென்மேற்கே 418 கி.மீ. தொலைவில் இருக்கும் ஃபானி புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹௌரா, கொல்கத்தா ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலை தீவிரமாக கவனித்து வருகிறோம். அனைத்து கட்சிப் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com