ஏழுமலையான் சொத்துகள் கொள்ளை போவதை தடுக்க மக்கள் இணைந்து போராட வேண்டும்: சிந்தா மோகன்

திருமலை ஏழுமலையான் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுக்க மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிந்தா மோகன் தெரிவித்தார்.


திருமலை ஏழுமலையான் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுக்க மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிந்தா மோகன் தெரிவித்தார்.
திருப்பதியில் வியாழக்கிழமை காலை ஏழுமலையான் சொத்துகளை தேவஸ்தான அதிகாரிகளிடமிருந்து பாதுகாக்க மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் திருப்பதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கையடக்கப் பிரதிகள் அளித்தனர். இதில் சித்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிந்தா மோகன்,  திருப்பதி கன்வீனர் நவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 
 சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து திருப்பதிக்கு கொண்டு வரப்பட்ட தங்கக்கட்டிகள் மீது சுவிஸ் வங்கியின் முத்திரை இருந்தது. வைகானச ஆகம விதிப்படி திருமலை ஏழுமலையான் கோயில் கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழுமலையானுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் யாரும் கடல் தாண்டி செல்லக்கூடாது என்று விதி உள்ளது. 
ஏழுமலையானுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு விதிமுறைகள் உள்ளது போல், தேவஸ்தானத்தில் நிலுவையில் உள்ள தங்கக்கட்டிகள் மட்டும் சுவிஸ் வங்கிக்கு கடல் கடந்து சென்றது ஆகம விதி மீறல். பக்தர்கள் ஏழுமலையானை பக்தியுடன் நோக்கினால், தேவஸ்தானத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் மட்டும் ஏழுமலையான் கஜானாவை முதலீடுகள் என்ற போர்வையில் காலி செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர். எனவே பக்தர்களுடன் இணைந்து உள்ளூர்வாசிகளும் ஏழுமலையான் சொத்துகள் மற்றும் தங்ககட்டிகள் முதலீடுகள் குறித்து போராட முன்வர வேண்டும்.  
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பும் அனைத்து பக்தர்களுக்கும் தேவஸ்தான அதிகாரிகள் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் உயர் அதிகாரிகளின் சொத்துகள், வங்கியில் உள்ள முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து இதுவரை பக்தர்கள் யாரும் கேட்கவில்லை. இதை தேவஸ்தான ஊழியர்கள் நலச்சங்கத் தலைவர்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் கூறி னார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com