குடியுரிமை விவகாரம்: தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு

குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி
குடியுரிமை விவகாரம்: தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு

குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராகுல் காந்தி தொடர்பாக புகார் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், பிரிட்டனில் செயல்படும் பேக்காப்ஸ் நிறுவனத்தின் 3 இயக்குநர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். கடந்த 2003ம் ஆண்டு இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2005, 2006ம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வரவு செலவு அறிக்கைகளில், ராகுல் காந்தி 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி பிறந்தார் என்றும், அவர் பிரிட்டன் பிரஜை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.
இதை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை விவகாரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து 15 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெய் பகவான் கோயல், சி.பி. தியாகி, வழக்குரைஞர் வருண் குமார் சின்ஹா ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பல ஆண்டுகள் ஆன பின்னரும், பிரிட்டன் குடியுரிமையை தாமாக முன்வந்து வாங்கிய ராகுல் காந்தி விவகாரம் மீது தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தியளிக்கிறது.
குடியுரிமை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், தேர்தல் ஆணையத்திடமும் அடிப்படை ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுலுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.
பிரிட்டன் குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்தும் ராகுலின் பெயரை நீக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது அந்த மனுக்களின் முக்கியத்துவத்தை கருதி அவற்றை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com