ஹிந்துக்களின் வாக்குகளைப் பெறவே பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக: சீதாராம் யெச்சூரி

ஹிந்துக்களின் வாக்குகளைப் பெறவே பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக: சீதாராம் யெச்சூரி

ஹிந்து மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே சாத்வி பிரக்யா சிங் தாக்குரைத் தேர்தலில் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம்


ஹிந்து மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே சாத்வி பிரக்யா சிங் தாக்குரைத் தேர்தலில் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான மக்களின் ஜனநாயகம் நாளேட்டுக்காக அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் நோக்கில், வகுப்புவாத பிரிவினை அரசியலில் பாஜக தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடியும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை நடந்து முடிந்துள்ள மக்களவைக்கான நான்குகட்ட தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற முடியாது என்று பாஜகவுக்குத் தெரிந்துவிட்டது.  ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியாதோ என்ற பயத்தில், மக்களிடையே மதத்தின் அடிப்படையில் அவர்கள் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே, ஜாமீனில் விடுதலை ஆகியுள்ள சாத்வி பிரக்யா சிங் தாக்குரை மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளனர். ஹிந்து மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, பிரதமர் மோடியும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஹிந்து வாக்குகளுக்காகத் தீவிர பிரிவினைவாத வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அதிருப்தியளிக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com