சுடச்சுட

  

  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  By DIN  |   Published on : 04th May 2019 05:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election commission


  புது தில்லி: இந்தியாவில்  இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை  தேர்தல் ஆணையம்  இன்று வெளியிட்டது.

  அதன்படி, முதல்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 69.5% வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 69.44% வாக்குகளும் பதிவாகின.

  3ம் கட்ட  தேர்தலில் 68.4% வாக்குகளும், 4வது கட்ட தேர்தலில் 65.1% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

  அதோடு, 2ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தில் 72.01%, புதுச்சேரியில் 81.19% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai