சுடச்சுட

    

    பாஜகவுக்கு வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மி

    By DIN  |   Published on : 04th May 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பாஜகவுக்கு தனது மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லாததாலேயே அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது. 
    இது தொடர்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 
    எந்தவொரு எம்எல்ஏவும் தான் பணம் பெற்றுக் கொண்டு கட்சி மாறினேன் என ஒப்புக் கொள்ள மாட்டார். தாம் விலகிச் செல்லும் கட்சியைத்தான் தவறு சொல்வார்கள். அனில் பாஜ்பாய் விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளது. 
    காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி மேற்கொண்ட முயற்சிகளால் அவர் ஆம் ஆத்மியை விட்டு விலகியுள்ளார் என்கின்றனர். ஆனால், அனில் பாஜ்பாய் காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் ஆம் ஆத்மியில் சேர்ந்தவர் என்பதை மறக்கக் கூடாது. பாஜகவுக்கு தனது மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் இப்படியான குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai