சுடச்சுட

  

  பஞ்சாபில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்

  By DIN  |   Published on : 04th May 2019 07:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் முன்னிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமர்ஜித் சிங் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதியில் மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ரூப்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அமர்ஜித் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

  ஏற்கெனவே, கடந்த மாதம் 29-ஆம் தேதி மான்ஸா சட்டப்பேரவை உறுப்பினர் நாஸர் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இரண்டு எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

  கடந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள 13 தொகுதியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலா 4 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 5 தொகுதிகளில் ஷிரோமணி அகாலி தளம் மற்றும் அதன் கூட்டணியான பாஜக வெற்றி பெற்றது.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai