சுடச்சுட

  

  விவசாயிகள் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லை: பிரியங்கா

  By DIN  |   Published on : 04th May 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  priyanka

  உத்தரப் பிரதேசத்தில் தனது தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில்  பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி.


  விவசாயிகள் நலனில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
  உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவரும், தனது தாயாருமான சோனியா காந்தியை ஆதரித்து பிரியங்கா வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
  ரேபரேலியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
  பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை பாதுகாக்கிறீர்கள். 
  இது மிகப்பெரிய சாதனைதான். இதை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். எனினும், நாட்டின் காவலாளி என்று கூறும் நீங்கள்(பாஜக) விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்க தவறியது ஏன்? 
  விவசாயிகளின் நிலங்களை பாதுகாப்பதே உண்மையான தேசியவாதம். மக்களிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்வதே தேசியவாதம். ஆனால் இதை பாஜகவினர் செய்வதில்லை.
  இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோரின் பிரச்னைகளை காதுகொடுத்து கேட்காதிருப்பது எந்த விதத்தில் தேசியவாதம் என்று தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் எங்கு சென்றாலும், கால்நடைகள் பிரச்னை குறித்து விவசாயிகள் புகார் அளிக்கின்றனர். நானும் நாட்டின் காவலாளி என்று பிரசாரம் செய்யும் பாஜகவினருக்கு, விவசாயிகளை பாதுகாப்பதில் அக்கறை இல்லை.
  கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதி எதையும்  பாஜக நிறைவேற்றவில்லை. தனிப்பெரும்பான்மையுடைய கட்சியாக பாஜக இருந்தும், மக்களின் நலனுக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை.
  பாஜக அரசு, எப்போதும் விளம்பரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது.
  மக்கள் எங்கு சென்று பார்த்தாலும், அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் முகம் தெரியுமாறு விளம்பரப்படுத்துவதில் மட்டுமே அவர்கள் குறியாக உள்ளனர். மக்களின் பிரச்னைகளை கேட்பதற்கு பாஜகவினருக்கு நேரமில்லை என்றார் பிரியங்கா. 
  குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தவில்லை..: இதனிடையே, தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக தனக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து பிரியங்கா கூறுகையில், வாகனத்தில் செல்லும் வழியில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதை கண்டு அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னை பார்த்ததும் கோஷமிட்டனர். தவறான வார்த்தைகளை பயன்படுத்தி கோஷமிட்டதால், அவர்களுக்கு சரியான வார்த்தைகளை சொல்லி கொடுத்தேனே தவிர பிரசாரத்தில் ஈடுபடுத்தவில்லை என்றார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai