புயல் என்றாலே ஒடிஸாவைத் தாக்கக் காரணம் என்ன? இதுவரை எத்தனை புயல்கள் தாக்கியுள்ளன?

பெற்ற தாயைப் பார்த்ததும் குழந்தை ஓடுவது போல புயல் என்றாலே அது ஆந்திரா அல்லது ஒடிஸாவை நோக்கி நகர்வதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று பலரும் கேட்பார்கள்.
புயல் என்றாலே ஒடிஸாவைத் தாக்கக் காரணம் என்ன? இதுவரை எத்தனை புயல்கள் தாக்கியுள்ளன?

பெற்ற தாயைப் பார்த்ததும் குழந்தை ஓடுவது போல புயல் என்றாலே அது ஆந்திரா அல்லது ஒடிஸாவை நோக்கி நகர்வதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று பலரும் கேட்பார்கள்.

காரணம் இல்லாமலா இருக்கும்? அதாவது, வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னங்கள் வடகிழக்கு பருவ மழை காலத்தில் பயணிக்கும் முக்கிய பாதையில் அதாவது புவியியல் அமைப்பின்படி புயல் பயணிக்கும் பாதையில் ஒடிஸா அமைந்திருப்பதே அதற்குக் காரணம்.

இதனால்தான் பருவ மழை காலங்களில் இந்தியாவில் ஆந்திராவின் வடகடலோர மாவட்டங்கள், ஒடிஸா, கிழக்கு பிகார், மேற்கு வங்கத்தின் தென்கடலோர மாவட்டங்கள் எப்போதும் ரெட் அலர்ட் பகுதியாகவே வைக்கப்பட்டிருக்கும். 

அதாவது, அரபிக் கடலை விட வங்கக் கடல் எப்போதும் சற்று சூடான தட்பவெப்பத்திலேயே இருப்பதால், அடிக்கடி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படுகிறது. அவ்வாறு உருவாகும் புயல் சின்னம் வடக்கு வடகிழக்காக நகர்ந்தால், அதன் பாதையில் முதலில் எதிர்கொள்வது அந்திரா அல்லது பெரும்பாலும் ஒடிஸாவாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 75 ஆண்டுகளில் ஒடிஸாவைத் தாக்கிய கடுமையான புயல்களின் பட்டியலை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அதில், காற்றின் வேகத்தை அடிப்படையாக வைத்து தரம்பிரித்தால் ஃபானி புயலானது 3வது ரேங்கில் உள்ளது.

சரி வாருங்கள் பட்டியலை பார்க்கலாம்

1999ம் ஆண்டு - ஒடிசா சூப்பர் புயல் - ஜகத்சிங்புர் - மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் காற்று
2013ம் ஆண்டு - ஃபைலின் புயல் - புரி - மணிக்கு 223 கி.மீ. வேகத்தில் காற்று
2019ம் ஆண்டு - ஃபானி புயல் - புரி - மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று
1971ம் ஆண்டு - பாலாசோர் புயல் - பாலாசோர் - மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று (புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் அப்போது  இல்லை)
1999ம் ஆண்டு - கோபால்புர் புயல் - கோபால்புர் - மணிக்கு 182 கி.மீ. வேகத்தில் காற்று
1967ஆம் ஆண்டு - ஒடிஸா புயல் - ஜகத்சிங்புர் - மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகத் தெரிவித்துள்ளார்.

மிக தீவிரப் புயலாக ஃபானி இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பை பெருமளவு தவிர்த்திருக்கும் ஒடிஸா மாநில அரசின் செயலுக்கு ஒரு சல்யூட் வைத்துத்தான் ஆக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com