ஃபானி புயலின் போது எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இந்தியாவை பாராட்டும் ஐ.நா.

ஒடிஸாவில் கரையைக் கடந்து மேற்கு வங்கம், வங்கதேசம் என பயணித்துக் கொண்டிருக்கும் ஃபானி புயலில் இருந்து தப்பிக்க மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை பாராட
ஃபானி புயலின் போது எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இந்தியாவை பாராட்டும் ஐ.நா.


ஒடிஸாவில் கரையைக் கடந்து மேற்கு வங்கம், வங்கதேசம் என பயணித்துக் கொண்டிருக்கும் ஃபானி புயலில் இருந்து தப்பிக்க மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா சிறப்பாக கையாண்டதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் புயலை துல்லியமாகக் கணித்து அரசுகளுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்ததும் பாராட்டுக்குரியதாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் ஃபானி புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 11 லட்சம் பேரை 900 முகாம்களில் தங்க வைத்து உயிரிழப்புகளை தவிர்த்திருப்பது சாதனையாகவே கருதப்படுகிறது.

இதனை ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டியுள்ளது.  இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் பாதிப்பு குறைப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மிகத் தீவிரப் புயலை எதிர்கொள்ள இந்தியா மேற்கொண்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், புயலின் போது ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்ற இலக்கோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியது. புயலின் போது ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்ற இலக்கை  இந்தியா கிட்டத்தட்ட தொட்டுவிட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் புயலை தீவிரமாகக் கண்காணித்து அவ்வப்போது தகவல்களை அளித்தன் மூலம், முன்கூட்டியே 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினரும், மாநில மீட்புப் படையினரும் இணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், புயலின் போது ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்ற நிலையை எட்ட உதவியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com