காஷ்மீரில் சகவீரர்களுடன் பேசும் அபிநந்தன்: வைரலாகும் விடியோ

பாகிஸ்தான் பிடியில் சிக்கி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் காஷ்மீரில் சக வீரர்களுடன் பேசும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
காஷ்மீரில் சகவீரர்களுடன் பேசும் அபிநந்தன்: வைரலாகும் விடியோ


பாகிஸ்தான் பிடியில் சிக்கி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் காஷ்மீரில் சக வீரர்களுடன் பேசும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்திய விமானப் படையினர் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலாகோட், முசாஃபராபாத், சகோட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை வான்வழி குண்டுவீசி தாக்கி அழித்தனர்.  

இதற்கு பதிலடி தரும் வகையில் பிப்ரவரி 27-ஆம் தேதி பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இதை கண்டறிந்த இந்திய விமானப் படை பாகிஸ்தானின் போர் விமானங்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது, இந்தியாவின் மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதேசமயம், இந்த சண்டையின் போது இந்தியாவின் மிக்-21 ரக போர் விமானத்தையும் பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. 

அந்த மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கிய இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாராசூட் மூலம் தப்பித்தார். ஆனால், அவர் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லையில் தரையிறங்கினார். இதையடுத்து, இரண்டரை நாள் அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்தார். 

அதன்பிறகு, இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் மார்ச் 1-ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, பல மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அவர் மீண்டும் விமானப் படையில் இணைய விமானப் படை அனுமதித்தது. எனினும் பாதுகாப்பு காரணமாக அவர் மேற்கு பிராந்தியத்தில் உள்ள விமானப் படை தளத்துக்கு மாற்றப்படுவதாக விமானப் படை தெரிவித்தது. 

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு பிறகு அபிநந்தன் பேசும் விடியோ முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com